000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஆலிங்கனமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a உமையை ஒரு கையால் அணைத்தபடி நிற்கும் சிவனார் ஆலிங்கன பெருமான் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a நான்கு திருக்கைகளுடன், இடது காலை சமபாதத்தில் ஊன்றி, வலது காலை சற்று தள்ளி வைத்து, முழங்காலை முன்னோக்கி வளைத்து ஊர்த்துவ ஜானுவில் நிற்கும் சடையார் ஜடாமகுடம் அணிந்துள்ளார். பின்னிரு கைகளில் வலதில் மழுவும், இடதில் மானாய் இருக்கலாம் (சிதைந்துள்ளது) கொண்டுள்ளார். வலது முன் கை ஊரு முத்திரையாக தொடையில் வைத்தவாறும், இடது முன் கை அருகில் நிற்கும் அன்னையின் தோளை அணைத்தவாறும் காட்டப்பட்டுள்ளன. தலையில் சடை மகுடத்துடன் இருபுறமும் பூரிமங்கள் காட்டப்பட்டுள்ளன. நெற்றிப்பட்டை தொய்யகம் போல் விளங்குகிறது. காதுகளில் செவிப்பூக்கள், இடது காதில் பத்ர குண்டலம், வலது காதில் வியாழ குண்டலம் அணி செய்கின்றன. கழுத்தில் சரப்பளியும், சவடியும் அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள இறைவரின் மார்பில் செல்லும் பட்டையான முப்புரிநூல் உடலின் பின்பக்கம் செல்கிறது. வயிற்றில் உதரபந்தம் (வயிற்றுப் பகுதியில் அணியப்படும் ஒரு வகை அணி. இவ்வணி வயிற்றுப்பகுதியையும், மார்புப் பகுதியையும் பிரித்துக் காட்டும்.) காட்டப்பட்டுள்ளது. தோள்களில் வாகுமாலையும், கைகளில் தோள் வளைகள், முன் வளைகள் அணி செய்கின்றன. அருகில் நிற்கும் அன்னையின் எழில் வாய்ந்தவளாக, அழகுப் பதுமையாக, கொடியிடையாளாக உள்ளாள். வலது காலை ஊன்றி, இடது காலை சற்றே நகர்த்தி வளைத்து நிற்கிறார். தலையில் முன்புறம் பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் அணி செய்கின்றது. தொய்யகம் நெற்றிப் பட்டையாக விளங்குகிறது. காதுகளில் வட்டவடிவமான தாடங்கம் என்னும் தோடுகள் அணிந்துள்ளாள். கழுத்தில் சரப்பளியும், மார்பில் சன்னவீரமும் அணிந்துள்ளாள். கைகளில் தோள்வளை, முன்வளைகள் அமைந்துள்ளன.இருகைகளில் இடது கையில் இடையிலிருந்து தொங்கும் ஆடையைப் பிடித்தவாறும், வலது கை மலரைப் பிடித்தபடியும் அமைந்துள்ளன. கணுக்கால் வரை ஆடையணிந்துள்ளார். ஆடையின் கொசுவம் இடது தொடையில் தவழ்கிறது. அண்ணலின் ஆலிங்கனத்தில், அன்பில் ஒடுங்கி அன்னை நிற்கிறாள். |
653 | : | _ _ |a ஆலிங்கனமூர்த்தி, அணைத்த பிரான், ஆலிங்கன பெருமான், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
914 | : | _ _ |a 10.5421455 |
915 | : | _ _ |a 78.51921402 |
995 | : | _ _ |a TVA_SCL_000189 |
barcode | : | TVA_SCL_000189 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |